வாழ்க்கைத் தத்துவம்!




திருமணம் ஆன ஒரு பெண் ஒரு பெரியவரிடம்  வந்து, “”பெரியவரே!… கல்யாணமாகி இரண்டு வருஷம்தான் ஆகுது. ஆனால் எனக்கும் என் கணவனுக்கும் அடிக்கடி வாய்ச் சண்டை வருது. வாழ்க்கை நரகமாயிருக்கு. நீங்கதான் யோசனை சொல்லணும்” என்று சொல்லி வணங்கினாள்.

அந்த பெரியவர்  அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார்.

அவளிடம் மருந்துள்ள ஒரு பாட்டிலை நீட்டி, “”இதிலே இனிப்பு மருந்து உள்ளது. உன் கணவர் உன்னிடம் கோபமாகப் பேசும்போது நீ இந்த மருந்தை வாயில் ஊற்றிக் கொண்டு விழுங்கிவிடாமல் சிறிது நேரம் இரு. அவர் கத்தி முடித்ததும் மருந்தை விழுங்கி விடு. எல்லாம் சரியாகிவிடும்” என்றார் சாந்தமாக.

அந்தப் பெண் நம்பிக்கையில்லாமல் அந்த மருந்தை வாங்கிச் சென்றாள்.

இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் வந்தாள்.

“”பெரியவரே!… இரண்டு மாதங்களாக எனக்கும் என் கணவருக்கும் சண்டையே வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்து நன்றாக வேலை செய்கிறது. மருந்து தீர்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் மருந்து கொடுங்கள்” என்றாள்.

பெரியவர்  சிரித்தார். “”இது மருந்தல்ல… சர்க்கரைத் தண்ணீர். தேவையானால் நீயே தயார் செய்து நான் சொல்லியபடி பயன்படுத்திக் கொள்’ என்றார்.

இதிலிருந்து என்ன புரிகிறது: வாய் மூடி இருந்தால் , எந்த பிரச்சனையும் வராது. மனைவி நாவை அடக்கினால் , கணவன் வாயை அடக்கிவிடுவான் . அனைத்து பிரச்சனைக்கும் காரணம் இந்த எலும்பு இல்லாத நாவுதான்!


ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார்.

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார்.

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

எப்பொழுதும் மனிதன் மென்மையாக இருக்க வேண்டும்! மென்மையாக மற்றவரிடம் பழக வேண்டும்! மென்மையாக நடக்க வேண்டும் ! மென்மையாக கூற வேண்டும்!
source : paristamil.com

கருத்துகள்