அதிகம் புகை பிடிக்கும் சென்னை பெண்கள்




நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புகையிலை பழக்கத்தால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாகஒன்பது லட்சம் பேர், இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


வருங்காலத்தில் இந்த தொகை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சித்தகவல், ஆய்வு ஒன்றில், வெளியாகியுள்ளது. ஐ.நா.,வின் அங்கமான உலக சுகாதார அமைப்பு, குளோபல் அடல்ட் டொபோக்கோ சர்வே என்ற புகையிலை பயன்பாட்டு விகித ஆய்வை நடத்துகிறது.

இந்த ஆய்வு, புகையிலை பழக்கம் அதிகம் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவில் நடந்த ஆய்வில், 15 வயதிற்கு மேல், புகையிலை பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல் சேகரிக்கப்பட்டது.

இதில், இந்தியாவில் நாளொன்றுக்கு, 2,500 பேர் புகையிலையால் பல நோய்களுக்கு உட்பட்டு இறக்கின்றனர். அதாவது, 40 வினாடிக்கு ஒருவர் இறக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும் புகையிலையால், 16.4 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை நகரில், கடந்த 2005ல், 2 சதவீத பெண்களிடம் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது என, ஒரு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இப்பழக்கம் தற்போது, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, தற்போது, சென்னையில், 6 சதவீதம் பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது.

இதனால், இவர்களில், 15.2 சதவீதம் பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மும்பை, டில்லி, கோல்கட்டா என, மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, சென்னையில் தான் அதிகம்.,

கடந்த 2010ல் நடந்த ஆய்வில், பெண்கள் புகையிலை தொடர்பான புற்று நோய்களால் சென்னையில், 15.2 சதவீதம்,மும்பையில், 13.5 சதவீதம், டில்லியில், 11 சதவீதம், கோல்கட்டாவில், 12.3 சதவீதம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெண்களும் இப்பொழுது புகை பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , மதுவும் இன்னும் கொஞ்சம் காலம் கழித்து பெண்கள் அதிகமாக குடிக்க ஆசைப்படுவார்கள் . இதுதான் மேல்நாட்டு நாகரிகம் . மதுவினாலும்  , புகை பிடிப்பதினாலும் கேடு வருவது உங்களுக்கு தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்! இந்தியாவில் நாகரிகம் என்ற பெயரிலே அநாகரிகம் அரங்கேற்றி வருவதை நாம் பார்க்கிறோம். மேல்நாட்டு கலாச்சாரம் வந்ததிலிருந்து குற்றங்கள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது என்பது எதார்த்த உண்மை . பழமை வேண்டாம் ,புதுமை தான் வேண்டும் அது அருமை என்று பெருமையாக கூறிவரும் இளஞ்ர்களை பார்க்கிறோம்.
இன்னும் சில காலத்துக்கு பிறகு பாலியல் குற்றம் ஒரு குற்றம்மாக கருதப்படாது என்று ஆகிவிடும் . வெட்கம் இல்லை என்றால் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ! தமிழ் நாடு தமிழ் இல்லாத நாடாக மாறிக்கொண்டு வருகிறது . நீங்கள் மாறினாலும் நாங்கள் மாறமாட்டோம் ! இஸ்லாம் எங்கள் மார்க்கம் ! மொழி எங்கள் தமிழ் மொழி ! நாடு எங்கள் இந்தியா !

கருத்துகள்