உணவை வீணடிப்பவர்களே ஒரு நிமிடம் !




உலகில் தயாரிக்கப்படும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஓராண்டில் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு வீணடிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் வீணடிப்பு 36 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் உணவுகள் வீணடிக்கப்படுவதாக ஐ.நா. அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

உயர் வருவாய் பிரிவினர் மற்றும் வாங்கும் சக்தி அதிகரித்துள்ள நடுத்தர பிரிவினருக்கு உணவின் மீதான் ஆர்வம் உயர்ந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் காரணமாக, உலக மக்கள் தொகையில் சுமார் 150 கோடி பேர் உடல் பருமன், அதிக எடை கொண்டவர்களாக உள்ளதாகவும் அதேநேரத்தில் 86 கோடி மக்கள் ஊட்டச்சத்தான உணவின்றி தவிப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

உலகம் முழுவதும் உணவு வீணாவதைத் தவிர்த்தால், கூடுதல் இயற்கை வளத்தின் தேவையின்றியே, 50 கோடி பேருக்கு உணவு அளிக்க முடியும் என்று ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், ஹோட்டல்கள், வீடுகள் என பல இடங்களில் உணவை வீணடிப்பவர்களை இனி ஒருநிமிடம் யோசிக்க வைக்கும் விஷயத்தை ஐ.நா. உணவு அமைப்பு வெளியிட்டிருக்கிறது.அகதிகளாக வந்தவர்களின் பல பணச்சசடங்கு நிகழ்வுகளில் நடக்கும் அநியாயத்தை நீங்களும் கண்டுருப்பீர்கள் தடுக்கமுடியாது தான் ஆனால் நாங்களாவது குறைத்துக்கொள்ளலாம்.

அல்லாஹ் தஆலா தனது திருமறையில் கூறுகிறான் :
உண்ணுங்கள் ,பருகுங்கள் வீண் விரயம்  செய்யாதீர்கள் ! வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் .


தன் பக்கத்திலிருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான இறை நம்பிக்கையாளராக முடியாது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம்: பைஹகி
மிஷ்காத் 424.

பசியின் கொடுமை , தாகத்தின் வரச்சி நோன்பு காலத்தில் உணர முடியும்!

கருத்துகள்