என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக

31:17. “என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

நாம் தொழுகை விடயத்தில் இன்னும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம் . வாரம் ஒரு முறை தொழுபவர்களும் இருக்கிறார்கள். வருடம் இருமுறை பள்ளிக்கு வருபவர்களும் இருக்கிறார்கள் . இன்று தொழுவோம் நாளை தொழுவோம் என்று நாம் காலத்தை தான் கடத்திக் கொண்டு போகிறோம் . மரணம் நமக்கு பின்னால் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது . நாம் தொழுதால் நமக்குதான் நன்மை , தொழாமல் இருந்தால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை . அல்லாஹ் தேவையற்றவன் . நாம் தேவையுள்ளவர்கள் என்பதை நாம் ஆழமாக சிந்திப்பதில்லை . கஷ்ட்டம் வந்தால் அல்லாஹ்வை அழைக்கிறோம், சந்தோசமாக இருக்குபோது அல்லாஹ்வை மறந்து ஆட்டம் போடுகிறோம் இதுதான் எதார்த்தமாக நடந்துக் கொண்டிருக்கிறது . மறுமையில் முதல் முதலாக கேட்கப்படும் கேள்வி  ''தொழுகை'' அது சீராக இருந்தால்  எல்லாம் சீராக அமைந்துவிடும். மாறாக ....???
அல்லாஹ் நம்மை தொழக்கூடிய கூட்டத்தில் சேர்ப்பானாக . ஆமீன் ..











31:18. “(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்லாஹ் ஒருவரை நேசிக்கவில்லை என்றால் அவரின் நிலை என்ன ஆகும்??  அவர் அல்லாஹ்வின் கருணையின் பார்வையிலிருந்து தூரமாக ஆகிவிடுவார் . ஒரு மனிதனுக்கு எப்பொழுது ஆணவம் வரும் ?  பதவி , செல்வம் , செல்வாக்கு , பணம் . இவைகளில் இருந்து வரலாம் . வராமல் இருக்க என்ன செய்வது.?  பதவியை  கொடுப்பது அல்லாஹ் ! செல்வத்தையும், பணத்தையும் கொடுப்பது அல்லாஹ் ! அவைகளை சிலருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கிறான் . அதில் சாதனை செய்பவர்களும் உண்டு , சோதனையில் தோல்வியை அடைபவர்களும் உண்டு. '' இந்த செல்வம் , பணம் நான் என் திறமையால் சம்பாதித்தது ! என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்தானே  ! இது ஆணவம் கொண்டு சொல்லும் வார்த்தை . அல்லாஹ் நம்மை எப்பொழுதும்  நேசிக்க வேண்டும் . அல்லாஹ்வின் அருள் எந்தநேரமும் நம்மை சூழ்ந்து இருக்க வேண்டும். பெருமை , ஆணவம் , திமிரு இன்னும் சில கெட்ட செயல்களை நாம் அகற்றிட வேண்டும் . அல்லாஹ்வின் அருளை பெற்றிட வேண்டும். அல்லாஹ்வின் நேசர்களாக ஆகிட வேண்டும்.









31:22. எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றை பலமாக பற்றிப் பிடித்துக் கொண்டான். இன்னும் காரியங்களின் முடிவெல்லாம் அல்லாஹ்விடமேயுள்ளது.






31:33. மனிதர்களே! உங்கள் இறைவனையஞ்சி (நடந்து) கொள்ளுங்கள்; இன்னும் அந்த (கியாமத்) நாளைக்குறித்துப் பயந்து கொள்ளுங்கள்; (அந்நாளில்) தந்தை தன் மகனுக்கு பலனளிக்க மாட்டார்; (அதே போன்று) பிள்ளையும் தன் தந்தைக்கு எதையும் நிறைவேற்றி வைக்க இயலாது; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே இவ்வுலக வாழ்க்கை உங்களை மருட்டி ஏமாற்றிவிட வேண்டாம்; மருட்டி ஏமாற்றுபவ(னாகிய ஷைத்தா)னும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை மருட்டி ஏமாற்றாதிருக்கட்டும்.

நாம் தினதொரும் குரானை விளங்கி படித்தோம் என்றால் இன்ஷாஅல்லாஹ் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிதான் என்பது உறுதி !
நாம் எப்பொழுது குர்ஆனை எடுப்போம் என்றால் நம் வீட்டில் யாரவது மரணித்து விட்டால் அவருக்காக ஓதுவோம் . இது இன்னும் நடைமுறையில் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது . அல்லாஹ் இந்த குர்ஆனை இறக்கியது உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களுகாக தான் ஒழிய இறந்தவர்களுக்காக அல்ல என்பதை இன்னும் நாம் அறியாமல் இருக்கிறோம் . 

  






31:34. நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.

சிந்திக்க வேண்டும் அன்பு சகோதர/ சகோதரிகளே! நாளை இறைவனை எப்படி எந்த நிலையில்  சந்திக்க போகிறோம் என்பதை இப்போதே நாம் சிந்திப்போம் .
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள்