ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை !


ஒவ்வொரு  குழந்தையும்  தன்னுடைய அகீகாவுக்கு அடைமானமாக இருக்கிறது தனது ஏழாம் நாளில் தனக்காக (ஆடு)  அறுக்கப்படும், அந்த குழந்தையின் தலை முடி இறக்கபடும், பெயர் வைக்கப்படும்

நபிமொழி

நூல்:  நஸயீ, -4149
அல்லாஹ்வின் தூதரின் சுன்னாக்கள்

ஏழாம் நாளில் ஆண் குழந்தை சார்பாக இரண்டு ஆடுகள் கொடுப்பது சிறப்பு
ஒரு ஆடு கொடுப்பது போதுமானது .


ஏழாம் நாளில் குழந்தையின் தலை முடி இறக்குவது

ஏழாம் நாளில்பெயர் வைப்பது
ஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் இஸ்லாம் அனுமதிக்காதவை

1.குழந்தை பிறந்தவுடன் அதனை கணவனின் தாயே முதலில் தூக்க (ஏந்துதல்)வேண்டும்.
2. குழந்தையின் காதில் பாங்கு, இகாமத் சொல்லி ஊத வேண்டும்.
3.குழந்தை கண்னை திறக்கும் போது அதன் தந்தை முன்னே நிற்கக் கூடாது.
4.குழந்தை பிறந்து 19வது அல்லது 30வது நாளில் தலை முடியை மழிப்பது.
5.விழுந்த தொப்புள் கொடி, தாயின் தலை முடி, களைந்த நகம் ஆகியவற்றை  நாற்பதாவது தினத்தன்று புதைத்து தொடக்கைக் கழிப்பது.
6.நெருப்பினால் சுட்ட இரும்பைக் கொண்டு குழந்தையின் தலைக்கு மேல் சுற்றுவது.
7.குழந்தைக்கு பாலூட்டும் போது தாய் கணவனை நினைப்பது.
8.குழந்தை சிரிக்கும் போது மலக்குகள் பூக் கொத்தைக் காட்டி சிரிக்க வைக்கின்றார்கள் என நம்புவது.
9.குழந்தை அழுதால் மலக்குகள் பூவைப் பறித்துக் கொண்டார்கள் எனப் பேசுவது.
10.குழந்தைக்கு பெயர் சூட்டுவதை தனியான விழாவாகக் கொண்டாடுவது.
11.சூட்டிய பெயரை கணவனின் தாய் தான் முதலில் அழைப்பது.
12.குழந்தையின் பெயரை மூன்று தடவைகள் கூப்பிடுவது.
13.குழந்தையை ஜெய்லானி, தெவட்டகஹ போன்ற தர்ஹாக்கள் நிறைந்த இடத்திற்கு எடுத்துச் சென்று கப்ரில் கிடத்துவது.
14.குழந்தைக்கு பாவா பெயர் சூட்டுவது.
15.பிறந்து நாற்பதாம் நாள் குடும்பத்தார், சுற்றத்தார் அனைவருக்கும் விருந்தளிப்பது.
16.நாற்பது நாள் வரை குழந்தையின் தாய் தொழாமல் இருப்பது.
17. 40ம் நாளைக்கு முதல் நாளன்று தாய் உபயோகித்த அனைத்து பொருட்களுடன் சுவரைக் கூட தேய்த்துக் கழுவுவது.
18. 40வது அன்று குழந்தையுடன் சேர்ந்து தாயும் குளித்தால்தான் கடமை நீங்குமென்று நம்புவது.
19. குழந்தைக்கு பேய், பிசாசின் தீங்கிலிருந்து காக்க ஹஸ்ரத்மார்களை வைத்து துஆ ஓதி மந்திரித்து தாயத்துக் கட்டி விடுவது.
20. குழந்தை அழுதால் பீங்கான்களில் இஸ்ம் எழுதி அவற்றை கரைத்துக் குடிக்கக் கொடுப்பது.
21.குழந்தை பிறந்தால் அவ்வீட்டிற்கு புதிய ஷைத்தானும் கூட வருவதாக நம்புவது.
22.குழந்தை பிறந்த வீட்டினுடைய முன் கதவில் வேப்ப இலைகளைக் கோர்த்து வைப்பது.
23.குழந்தை பிறந்து 40 வது தினத்தில் தாய், குழந்தை புத்தாடை அணிந்து விழாக் கொண்டாடுவது.
24.குழந்தையின் இடுப்பில் நாடா அணிவிப்பது.
source..lankamuslim.org

கருத்துகள்