அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

படுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்!


 ‘‘நம் உடலில் ‘மெலட்டோனின்’ (melatonin)என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது நமக்கு தூக்கம் வரும். குறைவாக சுரக்கும்போது தூக்கம் வராது. இந்த ஹார்மோனோ நம்மைச் சுற்றி அதிகமான வெளிச்சம் இருக்கும்போது குறைவாகவும், குறைவான வெளிச்சம் இருக்கும்போது அதிகமாகவும் சுரக்கும்.


பொதுவாகவே இரவு வெகுநேரம் வரையிலும் கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்து வேலை செய்கிறவர் களுக்கு அடுத்த இரண்டு மணி நேரம் வரையிலும்கூட, கண் முன்னே வெளிச்சம் இருப்பது போன்ற உணர்விருக்கும். இதனால் தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதேபோன்ற பிரச்னை விடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தை களுக்குக்கூட ஏற்படும். இதனால்தான் டி.வி&யை தூரமாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறோம்.

தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:

காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றி லுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை யெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் பின்பற்றினாலே தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்லும்.’’

நன்றி வைத்தியக் குறிப்பு
இது உண்மையான தகவல்கள் , காரணம் என் அனுபவத்தில் கண்ட இந்த கட்டுரையின் சில தகவல்கள் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!