அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

செவ்வாய், 26 நவம்பர், 2013

தாம்பத்தியம் இனிக்க வழிமுறைகள்


 


 தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவுபடுத்துங்கள். நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதை உறுதியளியுங்கள்.

துணையின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், அதை குறைகூறாதீர்கள். உங்களின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்தவர்களையும் மரியாதை செய்யுங்கள். இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கும்.

அவர்கள் முன் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக மிக அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் வேறு ஏதாவது கவலையில் வாழ்க்கைத் துணை இருந்தாலும்....ஆறுதல் வார்த்தை கூறத் தவறாதீர்கள்.

இன்பமும் ,துன்பமும் மாறி மாறி வரும் இன்பம் வரும்போழுது இருவரும் சந்தோசமாக இருக்க வேண்டும். துன்பம் வரும்போழுது இருவரும் பொறுமையாகவும் ,ஒருவோர்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும்!

தாம்பத்தியம் என்பது ஒரு இனிப்பு வகையான பண்டம்மாக இருக்க வேண்டும் , அந்த நேரத்தில் கசப்பான சில வார்த்தைகளை கொண்டு உங்கள் இனிப்பான உறவை கசப்பான பண்டமாக மாற்றிவிடாதீர்கள்! அதாவது அந்த நேரத்தில் தேவையில்லாத விடயங்களைப் பேச வேண்டாம் அப்படி ஏதாவது மனைவிக்கோ அல்லது கணவருக்கு கோபம் வரும் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம் .

அங்கு அன்புதான் வேண்டும் வம்ப்பு இருக்க கூடாது . கனிவான சொற்களைக் கொண்டு மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்! ஒரு பெண்ணுக்கு அழகு அவள் வெட்கம்தான் ! அவளின் பேரழகு அவளின் அன்பும் ,அடக்கமும், அரவணைப்பும் , ஒழுக்கமும் , கணவனுக்கு கீழ்படிதலும் , உறவுகளை அனுசரித்து கொள்வதும் இன்னும் பல விஷயங்களும் தான் ஒரு பெண்ணுக்கு பேரழகு !!!

நன்றி பாரிஸ் தமிழ் மற்றும் சத்திய பாதை இஸ்லாமும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!