நோயாளியை விசாரிக்கச் சென்றால்


 நோயாளியை விசாரிக்கச் சென்றால்
அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி முத்ஹிபல் ப(இ)ஃஸி இஷ்பி(எ) அன்தஷ் ஷாபீ(எ) லா ஷாபி(எ)ய இல்லா அன்(த்)த ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.

இதன் பொருள் : இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும். ஆதாரம்: புகாரி 5742

அல்லது

அல்லாஹும்ம ரப்ப(இ)ன்னாஸி அத்ஹிபில் ப(இ)ஃஸ இஷ்பி(எ)ஹி வஅன்தஷ் ஷாபீ(எ) லாஷிபா(எ)அ இல்லா ஷிபா(எ)வு(க்)க ஷிபா(எ)அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!  ஆதாரம்: புகாரி 6743

அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து

பி(இ)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு அவூது பி(இ)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிருஎன்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.  ஆதாரம்: முஸ்லிம் 4082

அல்லது

லா ப(இ)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும் எனக் கூறலாம்.  ஆதாரம்: புகாரி 3616
மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது
அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப(எ)னீ இதா கான(த்)தில் வபா(எ)(த்)து கைரன் லீ

இதன் பொருள் : இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்! எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5671, 6351

(ஒருவருக்கு திடீரென உடம்பு முடியாமல் போனால், அவருக்கு மனதை இதமாக்கும் நல்ல துஆ, மற்றும் ஆறுதலான வார்த்தைகளை கூறுவதை விட்டு விட்டு அவர்கள் மனதை நோகடிப்பது போல் வார்த்தைகளை சிலர் பேசுகின்றனர். இதை நேரில் கண்ட போது மிகவும் வேதனையாக இருந்தது)

ஆண்டவன் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக....


நன்றி jaleela -duwa .blogspot .com

கருத்துகள்