அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

வெள்ளி, 29 நவம்பர், 2013

இந்திய உளவுத்துறையும் மற்றும் இந்தியன் முஜாஹிதீன் இயக்கமும்.



அக் 31/2013: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் பாட்னா கூட்டத்தில் தாக்குதல் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று முன்பே பீகார் அரசுக்கு தகவல் தெரிவித்திருந்தோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.


பாட்னா குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாஹிதீன்கள்தான் காரணம் என்ற குற்றச்சாட்டு நிலவில் இருக்க இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. பேரணியில் ஹிந்துத்துவவாதிகள் குண்டு வைப்பார்கள் என்று ஐந்து மாதங்களுக்கு முன்பு ஐபி அளித்த முன்னறிவிப்பு இப்பொழுது விவாதமாகி இருக்கிறது. மோடியின் தேர்தல் பேரணியில் வீரியம் குறைந்த குண்டுகள் வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதாக இருந்தது ஐபியின் முன்னறிவிப்பு. 

குஜராத்தில் நடந்த இடைதேர்தல் சம்பந்தமாக இந்த முன்னறிவிப்பு வந்தது என்றாலும் பாட்னாவில் இதே போன்று வீரியம் குறைந்த குண்டுகள் வெடித்திருப்பதனால் புலனாய்வு அதிகாரிகள் தங்கள் விசாரணையை அதனை நோக்கியும் திருப்பியுள்ளனர். ஒரு ஹிந்துத்துவ அமைப்புதான் குண்டு வெடிப்பை நிகழ்த்தும் என்றும், அது மோடியுடைய கூட்டத்தில் நடப்பதற்குத்தான் அதிக வாய்ப்பு உள்ளது என்றும் ஐபி தெளிவான முன்னறிவிப்பு செய்திருந்தது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள்தான் இதன் பின்னால் இருக்கிறார்கள் என்று அந்த முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அறிக்கை மே 21 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா உட்பட தேசிய நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. முஸ்லிம்களை கவர்வதற்காக மோடி எடுத்து வரும் முயற்சிகளைத் தடுப்பதற்காகவே இந்த ஹிந்துத்துவ அமைப்பு இதில் ஈடுபடுகிறது என்று ஐபி தெளிவாக்கியிருக்கிறது. தான் ஹிந்துக்களுக்கு மட்டும் தலைவர் அல்ல என்று மோடி பாட்னா கூட்டத்திற்கு முன்புள்ள கூட்டத்தில் கூறியிருந்தார். அத்தோடு மோடி நடத்திய சத்பாவனா நிகழ்ச்சியும் கவனிக்கத்தக்கது. அதில் முஸ்லிம் தலைவர்கள் உட்பட சில முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

இந்த விஷயத்தில் மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்கவும், இந்தியாவை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்க வேண்டும் என்பதை மோடிக்கு நினைவூட்டவுமே இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது.மக்கள் கொல்லப் படக்கூடாதென்றும், அதே சமயம் அவர்கள் பீதிவயப்பட வேண்டுமென்றும் கருதித்தான் வீரியம் குறைந்த குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக ஐபி அறிக்கை கூறுகிறது. பாட்னாவில் வெடித்த அனைத்து குண்டுகளும் சக்தி குறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கும் இந்தக் குண்டுவெடிப்புக்குப் பின்னால் ஹிந்துத்துவ சக்திகள்தான் இருக்கும் என்று சூசகமாக குறிப்பிட்டிருந்தனர்.மோடியின் நிகழ்ச்சிகளுக்கு அச்சுறுத்தல் உண்டென்று பீகார் அரசுக்கு ஐபி முன்னரே தகவல் அளித்திருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று கூறினார். ஆனால் இதுகுறித்த விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

குறிப்பு: மேலும் இந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு என்பது ஐபி ஏற்ப்படுத்திய ஒரு போலி அமைப்பு என்பதை பல்வேறு சந்தர்பங்களில் வெளிப்பட்டுள்ளது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கும் ஐபிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும், ஐபி தான் செய்ய நினைப்பதை இவர்களை கொண்டு நிறைவேற்றும் என்பதும் பல்வேறு சந்தர்பங்களில், பல்வேறு நிகழ்வுகளில் உண்மையாகி இருக்கிறது. இந்திய உளவுத்துறை இந்திய ஓட்டு பொருக்கி கட்சிகளின் கைப்பாவை. இந்திய அரசியல் சதுரங்கத்தில் ஒட்டு பொருக்கி கட்சிகளின் ஆதாயத்துக்கு தகுந்தவாறு பல்வேறு செயல் திட்டங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

மொத்தத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்கிற இரண்டு ஓட்டு  பொருக்கி தேசிய அரசியல் கட்சிகளும் விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் அப்பாவிகள் பலியாகிறார்கள் என்பதே உண்மை.

*மலர் விழி*

 source: sinthikkavum.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!