அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

சனி, 9 நவம்பர், 2013

நல்லதோரு குடும்பம் !




அன்று கூட்டு குடும்பம் , இன்று ? அன்று அன்பு , பாசம் , நேசம் , நட்பு . இன்று ? அன்று ஒரு குடும்பத்தில் ஒருவர் உழைத்து பல நபர்கள் உண்டார்கள் . இன்று இருவர் உழைத்து கடன் பட்டார்கள் . வாழ்க்கைக்கு பொருள்களை தேடி அலைகிறோம், ஆனால் , வாழ்கையின் பொருளை தேட மறந்துவிடுகிறோம் !


நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்றதெல்லாம் அந்தக்காலம் போலிருக்கிறது. இன்றைய நிலையில் வீட்டுக்குள்ளேயே நடக்கும் அடிதடிப் போராட்டங்களால் வீடுகள் பல்கலைக்கழகம் ஆகிவருகிறது என்பது தான் உண்மை.

பள்ளிக்குப் போகிற ஒரே குடும்பத்துப் பிள்ளைகளிடம் கூட ஒற்றுமையில்லாத எலியும் பூனையும் நிலைதான் இன்றைய தினம் நீடிக்கிறது.

கணவன் மனைவி நிலையோ இன்னும் பரிதாபம். இருவரில் யார் பெரியவர் என்ற ஈகோ குடும்பத்தையே சுனாமியாய் ஆட்டிப்படைத்து விடுகிறது.

அண்ணன் தமபிகள் மட்டும் இதில் சளைத்தவர்களா என்ன? வேலை பார்த்து குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்கு உதவுகிற அண்ணனுக்கு, படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிற தம்பி சுமையாகத் தெரிகிறான். கிடைக்கிற நேரங்களில் எல்லாம் வார்த்தையால் வறுத்தெடுக்கிறான். இதனால் ஒட்டுமொத்தக் குடும்பத்திலும் நிம்மதியில்லாத நிலை தான் நீடிக்கிறது. அண்ணன்கள் இருவரும் வேலைக்குப் போய் தங்களுக்கென்று மணவாழ்க்கையையும் அமைத்துக் கொண்டு விட்ட பிறகு அவர்களுக்கே சுமையாகத் தெரிகிறாள், வீட்டில் இருக்கும் வயதுக்கு வந்த தங்கை.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்பம் என்ற நிலையை மக்கள் விரும்பினார்கள். அந்தக் குடும்பங்களை பொறுத்தவரையில் ஒருவர் மட்டும்தான் பேசுவார்.வரே அந்தக்குடும்பத்தின் தலைவராக இருப்பார். வீட்டில் நடக்கும் எந்த ஒரு சம்பவமும் அவரது கவனத்துக்கு வந்து விடும். விஷயத்தை அலசி ஆராய்ந்து அவர் சொல்கிற தீர்ப்பே அந்தக் குடும்பத்தின் வேத வாக்காக இருக்கும். இதனால் குடும்பத்தின் மற்றவர்கள் அவர்கள் வேலையை மட்டும் பார்த்தனர். இதனால் குடும்பங்களும் தழைத்தது. பிரச்சினைகளுக்கும் வழியில்லாது போயிற்று.

ஆனால் இன்றைய சூழ்நிலை முழுக்க முழுக்க வேறு. கூட்டுக் குடும்பம் என்பது இப்போது கனவு விஷயமாகி விட்டது. குடும்ப உறவுகள் இப்போதெல்லாம் தாமரை இலைத்தண்ணீர் போல ஒட்டுதல் இல்லாத நிலையாகி விட்டது. வீட்டுக்குள்ளேயே யார் பெரியவர் என்ற எணணம் தலைதூக்கி விட்டது. நீ என்ன சொல்வது... நான் என்ன கேட்பது என்கிற விட்டேத்தியான மனநிலை வீட்டுக்கு வீடு பாகுபாடில்லாமல் விஷவித்தாக வளர்ந்து விட்டது.

இதெல்லாம் நல்லதுக்கில்லை என்று தெரிகிறது. நல்லது பண்ண ஏதாவது வழிகள் உண்டா என்று கேட்கத் தோன்றும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் நமது கண்ணின் மணிகள் என்ற எண்ணம் குடும்பத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கும் மேலோங்க வேண்டும். யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் அதை தங்களுக்கே நேர்ந்ததாக எண்ணிக்கொண்டு உடனடி நடவடிக்கையை தொடர வேண்டும். தொழில் நிமித்தமாக வெளியூர்களில் இருக்க நேர்ந்தாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி மனதளவில் தூரம் என்னைப் பிரிக்கவில்லை என்பதாக காட்டிக்கொள்ளலாம். குடும்பத்தில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் பொறுப்பில் உள்ளவர்கள் எந்தவித முகச்சுளிப்புமின்றி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் தினமும் மூன்று மணி நேரமாவது அவர்களுக்கு நேரம் ஒதுக்கவேண்டும். தேவைப்படுகிற நேரங்களில் அட்வைஸ் அவசியம். அதை முறைக்க அவசியப்படாத அளவுக்கு கேட்டுக்கொள்கிற மனநிலையில் சொல்வதில் தான் வெற்றியே இருக்கிறது.

இந்தப்பக்குவம் மட்டும் வந்து விட்டால் அங்கே பொறாமை இல்லை. பொறாமை இல்லாத இடத்தில் விட்டுக்கொடுக்கிற மனப்பான்மை தானாக வந்து விடும்.
நன்றி கூடல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!