இணை வைத்தலின் விளைவுகள்




அல்லாஹ் மிகக் கருணையுடையவன்  மன்னிப்பவன் .
தர்கா வழிபாடு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகமாகும் .
ஏனைய குற்றங்கள் புரிவோருக்கு கிடைக்கும் மன்னிப்பு இவர்களுக்கு அறவே கிடையாது.
இவர்கள் ஒரு காலத்திலும் சொர்க்கத்தில் நுழைய முடியாது.
"இணை வைத்தல் " என்று சொல்லப்படுகின்ற இந்தப் பாவத்தை புரிவோர் ஏதேனும் நல்லறங்கள் புரிந்தாலும் , அந்த நல்லறங்களும் கூட அழிந்து பாழாகி விடும் என்பதை அல்லாஹ் தன திருமறையில் பல்வேறு இடங்களில் வலியுறுத்துகிறான் .

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் . அதற்க்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை , தான் நாடியோருக்கு மன்னிப்பான் . அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார் .
                   (அல்குர் ஆன் 4:48)

"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ் " எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை ) மறுத்து விட்டனர் . " இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் , உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் ! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான் . அவர்கள் சென்றடையும் இடம் நரகம் . அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை " என்றே மஸீஹ் கூறினார் .
                    (அல்குர் ஆன் 5:72)

மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படுமானால் தனது இறைவனிடம் சரணடைந்தவனாக அவனை அழைக்கிறான் . பின்னர் இறைவன் தனது அருட்கொடையை வழங்கும் போது முன்னர் எதற்காகப் பிரார்த்திதானோ அதை அவன் மறந்து விடுகிறான் . அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுப்பதற்காக அவனுக்கு இணை கற்பிக்கிறான் . " உனது (இறை) மறுப்பில் சிறிது காலம் சுகம் அனுபவித்து கொள் ! நீ நரகவாசிகளைச் சேந்தவன் " எனக் கூறுவீராக!
                    (அல்குர் ஆன் 39:8)

" நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர் . மாறாக , அல்லாஹ்வையே வணங்குவீராக ! நன்றி செலுத்துவோரின்  ஆவீராக! என்று (முஹம்மதே !) உமக்கும் , உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது .
                     (
இதுவே அல்லாஹ்வின்  வழி .தனது அடியார்களின் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான் . அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல) வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும் .
                      (அல்குர் ஆன் 6:88)

" எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிரானோ அவன் நரகில் நுழைவான் " என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார் .
அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் புகாரீ 4497)

கருத்துகள்