அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

வியாழன், 26 டிசம்பர், 2013

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க வழிகள்


பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையை போக்க வழிகள்
நன்றி பாரிஸ் தமிழ் காம்
 இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை.அதே போல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம்.

சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர்ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என்றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப்படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது.

உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதியான வெளிப்படுத்தல்கள் போன்றவைகள் இதற்கு காரணமாக விளங்கலாம். இது உங்களின் ஒட்டுமொத்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மையையும் உண்டாக்கி விடுகிறது.

பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்சனைகள், சீரில்லாத கருமுட்டை வெளிப்படுதல், ஹார்மோன் சமமின்மை, உடல் பருமன் போன்றவைகள். பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

துரித உணவு மற்றும் ஜங்க் உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்த்திட வேண்டும். இவ்வகை உணவுகளில் தீவனச் சேர்க்கைப் பொருட்கள் மற்றும் பதப்பொருட்களும் சேர்க்கப்பட்டிருக்கும். இது உங்கள் கருத்தரிப்புத் திறனை வெகுவாக பாதிக்கும். மலட்டுத்தன்மையை தடுக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கருத்தரிப்புத் திறனை பாதிக்கும் மருத்துவ நிலைகளை பற்றி தெரிந்து கொள்ள வல்லுனர்களிடம் இருந்து மருத்துவ ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். மலட்டுத்தன்மை ஏற்படும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சனைகளை கண்டறிந்தால் மலட்டுத்தன்மையை தவிர்க்கலாம். பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது உடல் பருமன். உடல் பருமன் ஹார்மோன் சமமின்மையை உண்டாக்கும். அதனால் மலட்டுத் தன்மை ஏற்படும்.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் போன்ற பல பிரச்சனைகளை சரி செய்ய உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும். பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மையை தடுக்க சரியான உடல் எடையுடன் இருப்பதும் அவசியமானதாகும்.

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்திட வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையே உங்கள் வாழ்க்கையை பற்றிய அனைத்தையும் கூறி விடும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றி பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையை தடுத்திடுங்கள்.
இது சத்திய பாதை இஸ்லாம் கருத்து:
குழந்தை பாக்கியம் கொடுப்பதும் , மலட்டுத்தன்மை ஆக்குவதும் அல்லாஹ் தான் , அவன் விரும்பியவருக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கிறான் , அவன் விரும்பியவருக்கு மலட்டுத்தன்மையையும் ஆக்குகிறான் . இருப்பினும் நமக்கு தெரியாது  நாம் பாக்கியம் உள்ளவர்களா ? அல்லது இல்லாதவர்களா ? என்று. அல்லாஹ்விடம் அதிகம் பிரார்த்தனை மூலம் நம் கோர வேண்டும். மனம் தளந்து விட கூடாது. சிலருக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ,அல்லது அதற்க்கு மேல் குழந்தை பேரு கிடைத்திருக்கு .

இதில் கூறப்பட்டது போல எல்லா முயற்ச்சிகளும் ஆலோசனைகள் படி நடந்தது , பிறகு அல்லாஹ் மீது பூரண நம்பிக்கை வையுங்கள்! அல்லாஹ் நாடினால் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!