அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

தருமமே சிறந்தது

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்! தருமமே சிறந்தது

அல்லாஹ்வின் திருபெயரால் ..........

பெருமானார் [ஸல்] அவர்கள் ஒரு நாள் தமது தோழர்களுக்கு தருமத்தைப் பற்றி உபதேசம் செய்யும்போது சொன்னார்கள், 'பூமி அசைந்தாடாமல் இருக்க அல்லாஹ் மலைகளை படைத்து அதன் மீது வைத்தான். மலைகளுடைய பலத்தைப் பார்த்த வானவர்கள் அல்லாஹ்வைப் பார்த்து '' உன்னுடைய படைப்புகளில் மலைகளைவிட மிக பலம் உடையது எது?  ' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்  'இரும்பு' என்று பதிலளித்தான். 'இரும்பை விட மிகப்பலம் உடையது எது? என்று கேட்க அல்லாஹ் ''நெருப்பு' என்று விடையளித்தான். 'நெருப்பை விட மிக பலம் வாய்ந்தது எது? ' என்று கேட்க அல்லாஹ் 'தண்ணீர்' என்று விடையளித்தான். ''தண்ணீரை விட மிகவும் பலம் உடையது எது? என்று கேட்க அல்லாஹ்  'காற்று ' என்று விடையளித்தான். காற்றை விட மிகவும் பலம் உடையது எது? என்று கேட்க அதற்கு அல்லாஹ் , 'ஒரு மனிதன் தனது வலக்கரம் செய்யும் தருமத்தை தனது இடதுகரம் அறியாமல் மறைத்துக் கொடுக்கின்றானோ, அது மற்ற எல்லாவற்றையும்விட மிகப் பெரிய தாகும்' என்று விடையளித்தான்.

அன்பு சகோதர/ சகோதரிகளே! இதிலிருந்து நமக்கு கிடைக்கும் படைப்பினை . தர்மம் செய்வது சிறந்தது. அந்த தர்மம் கெட்ட மரணத்தைத் தடுக்கிறது. அதை செய்யும்போது அந்தரங்கமாக செய்வது சிறந்தது. விளம்பர விரும்பிகள் இதை உணர வேண்டும். படைப்பினை பெற வேண்டும்.

*******************************************************************************
நன்மை தரும் செயல்கள் !!!!

பெருமானார் [ஸல்] அவர்களிடம் ஒரு நாள் தோழர்கள், 'நாயகமே! மனிதன் மரணித்த பின்பும் அவனுக்கு நன்மைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும் செயல்கள் யாவை? எனக் கேட்டார்கள். அதற்கு பெருமானார் [ஸல்] அவர்கள், '1. தாம் கல்வியைக் கற்று, பிறருக்கும் போதிப்பது. 2. தனது பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக வளர்ப்பது.3. மற்றவர்கள் ஓதுவதற்காக குர்ஆன் ஷரீபை வாங்கி வைப்பது.4. இறைவனின் பெயரால் பள்ளி வாசல் கட்டுவது.5. பிரயாணிகள் வசதிக்காக விடுதிகள் கட்டுவது.6. மக்களின் வசதிக்காக ஆறு, குளம் வெட்டுவது.7. தான் சம்பாதித்த சொத்திலிருந்து பிறருக்கு தர்மம் செய்வது. இவைகளெல்லாம் அழியாத அறங்களா கும் . அவைகள் நிரந்தரமாக இருக்கும் வரை தன நன்மைகள் , அதைச் செய்தவருக்கு அவர் மரணித்த பின்பும் கிடைத்துக் கொண்டே இருக்கும்' என்று விடையளித்தார்கள்.

அல்லாஹ்வும் அவன் தூதர் நபிகள் நாயகம் [ஸல்] அவர்களும் காட்டி தந்த வழியை  விட்டு விட்டு , மார்க்கத்தில் இல்லாத நூதன் வழிகளை பின்பற்றுகிறீர்கள் ?
அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் ! மறுமை நாளை எண்ணி பயந்துக் கொள்ளுங்கள்!  நபி வழியைப் பின்பற்றுங்கள்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.