அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

புதன், 22 ஏப்ரல், 2015

நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!


நாயகம் வாக்களித்த சொர்க்கம் செல்லும் வழிகள்!
இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே

( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ
اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا
إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ
وَكُفُّوا أَيْدِيَكُمْ )

ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால்
உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
பேசினால் உண்மையே பேசுங்கள்! வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்! அமாநிதத்தை
உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்! கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்!
பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்-
தடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)


(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه
عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا قَالَ
أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمُ
الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ
فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي
اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا
قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ
صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا
دَخَلَ الْجَنَّةَ)

உங்களில் இன்று நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள்
கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று
ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர்
(ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று
கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று
நோயாளியை விசாரித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி)
அவர்கள், நான்! என்றார்கள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒருவர்
நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1707)


( خمس من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضاً وشهد جنازة
وصام يوماً وراح يوم الجمعة وأعتق رقبة)

ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ
அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர் நோயாளியை
விசாரிக்கவேண்டும். ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும். அன்றைய தினம் நோன்பு
நோற்றிருக்க வேண்டும். ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும்.
அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : இப்னுஹிப்பான்)


( عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه
عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا
عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ
خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ
بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ
النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ )

ஐந்து காரியங்கள் உள்ளன. அவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் அல்லாஹ்வின்
பொறுப்பில் வந்துவிடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்திரவாதம்
கொடுத்தார்கள். நோயாளியை விசாரிப்பவர் அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்பவர்
அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் போராட வெளியேறிச் செல்பவர் அல்லது
-முஸ்லிம்களின் ஆட்சித்- தலைவரை மதிக்கவேண்டும், கண்ணியப்படுத்தவேண்டும்
என்ற நோக்கத்தில் அவரிடம் செல்பவர் அல்லது பிறருக்கு துன்பம்
கொடுக்காமலும் பிறரின் துன்பத்திற்கு ஆளாகாமலும் தன் வீட்டிலேயே அமர்ந்து
கொள்பவர் என்று கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் : எந்த மனிதரைப் பற்றியும் புறம் பேசாமல் வீட்டிலேயே
அமர்ந்து கொள்பவர் என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் -ரலி, நூற்கள் : அஹ்மத் 21079,
இப்னுஹுஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம்)

அபூ கஸீர் அஸ்ஸுஹைமீ அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
ஒரு அடியான் ஒரு அமலைச் செய்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட வேண்டும்!
அத்தகைய அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று அபூதர் (ரலி) அவர்களிடம் நான்
கேட்டேன். அதற்கவர்கள், இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கவர்கள், அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும் என்றார்கள். அல்லாஹ்வின்
தூதரே! நிச்சயமாக ஈமானுடன் செயல்களும் உள்ளன! என்றேன். அதற்கவர்கள்,
அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து சிறிதளவாவது தர்மம் செய்யவேண்டும்
என்றார்கள். அவரிடம் எதுவும் இல்லை என்றால்? என்று நான் கேட்டேன்.
அதற்கவர்கள், அவர் தன் நாவால் நல்லவைகளைக் கூறட்டும்! என்றார்கள். அவர்
சரியாக பேசமுடியாத திக்குவாய்க்காரராக இருந்தால்? என்று கேட்டேன்.
அதற்கவர்கள், பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்! என்று கூறினார்கள். அவரே
சக்தியற்ற பலவீனமானவராக இருந்தால்? என்று கேட்டேன். கைத்தொழில்
தெரியாதவனுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கட்டும்! என்றார்கள். அவரே தொழில்
தெரியாதவராக இருந்தால்? என்று கேட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை
நோக்கிப் பார்த்து, உன்னுடைய நண்பனிடம் எந்த ஒரு நலவையும் விட்டுவைக்க
நீர் விரும்பவில்லை போலும்! அவன் மக்களுக்கு துன்பமிழைக்காமல்
இருக்கட்டும்! என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே!
நிச்சயமாக இது இலகுவான வார்த்தையாகும் என்றேன். அதற்கவர்கள், என்னுடைய
உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, யாரேனும் ஒர் அடியான்
அல்லாஹ்விடம் இருக்கும் கூலியைப் பெறும் நோக்கத்தில் இவற்றில் ஏதேனும்
ஒன்றை நிறைவேற்றினால் நிச்சயமாக மறுமையில் அச்செயல் அவரின் கையைப்
பிடித்து அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடும் என்றார்கள்.
(நூற்கள் : இப்னுஹிப்பான், தப்ரானீ, ஹாகிம்)


(عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى
النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ
اللَّهِ عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ لَئِنْ
كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ أَعْتِقِ
النَّسَمَةَ وَفُكَّ الرَّقَبَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ
أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ قَالَ لَا إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ
تَفَرَّدَ بِعِتْقِهَا وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا
وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ
فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ
وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ فَإِنْ لَمْ تُطِقْ
ذَلِكَ فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ )

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை
சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று
கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும்
நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்! -- ஜீவன்களை உரிமை
விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும்
ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை
உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் உரிமை வழங்குவதாகும். அடிமையை
உரிமை விடுவதென்பது அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும். மேலும் பால்
கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு! பிரிந்து வாழும் உறவினர்களுடன்
இணைந்து வாழவேண்டும். இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால்
பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு! நன்மையை ஏவு!
தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால் நன்மையைத் தவிர
வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள்.
(அறிவிப்பவர் : பரா இப்னு ஆஸிப் -ரலி, நூற்கள் : தயாலிஸீ, அஹ்மத் 17902,
இப்னுஹிப்பான்)


நன்றி- இஸ்லாம் கல்வி.காம்,

அப்துர் ரஸாக், முமுக, துபை.