அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

புதன், 20 மே, 2015

கருத்துக்கள் ' வரவேற்று ! வேறுபாடுகளை ' களைவோம் !!இன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக இருப்பது
கருத்து வேறுபாடுகளும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான்.
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு இயக்கம் என சமூகத்தை
பிரித்து விட்டார்கள். அதனால் முஸ்லிம் சமூகத்தின் உண்மையான பிரச்சனைக்கு
தீர்வை எட்டுவதை விட்டு தங்களுக்குள் அடித்துக்கொண்டு சமூகத்தை
பின்னோக்கி இழுத்து செல்கிறார்கள்.
இந்த பிரச்சனைகளை எப்படி களைவது? அதற்கு என்னதான் வழி?
ஒருமுறை மௌலானா ஹசன் அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது
குறிப்பிட்டார்கள். “நமது பிரச்சனைகளுக்கு இரண்டு காரணங்கள்தான். ஒன்று
குரானை நாம் கைவிட்டது. மற்றொன்று நமக்கிடையே நடக்கும் உள் சண்டைகள்”

என்று கூறினார்கள். அதுதான் இன்றும் நடந்து வருகிறது.
இன்று நாம் குரானை தொட்டே பல நாட்கள் ஆகிவிட்டது. அதனால் அது நமக்கு
கற்று கொடுக்கும் விசயங்களிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டோம். குரான்
முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ளவர்களாக இருக்க சொல்கிறது. உள் சண்டைகள்
குறித்து கடுமையாக எச்சரிக்கிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதாக சொல்லும் நாம்
அவர்களின் உபதேசங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நபி ஸல் அவர்கள்
கூறினார்கள். “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!
ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய
மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான்
கொண்டவராக மாட்டீர்கள்.” என்று. ஆனால் நாம் ஒருவருக்கொருவர்பரஸ்பரம்
அன்பை வளர்ப்பதிற்கு பதிலாக மனஸ்தாபங்களை வளர்த்து வருகிறோம்.
நாம் குரானையும், நபி ஸல் அவர்கள் வழிமுறையையும்   பின்பற்றாததால் இன்று
பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறோம். பெரும்பாலான சண்டைகள் குறுகிய
நோக்கங்களுக்காகவே இருக்கிறது. சிறிய சிறிய கருத்து வேறுபாடுகள்தான்
பெரிய பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன.
ஆனால் அதைவிட பெரிய பிரச்சனைகளை பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இன்று
இஸ்லாமும் முஸ்லிம்களும் எல்லாப் பக்கங்களிலும் தாக்கப்படுகிறது.
தீவிரவாதம் என்ற பெயரால் முஸ்லிம் சமூகம் நசுக்கப்படுகிறது. அவர்களின்
அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. மற்றொரு பக்கம் கலாச்சார
சீரழிவால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. சமூகத்தில் மது,
மாது, வட்டி என ஒழுக்கச் சீர்கேடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சீர்கேடுகளுக்கெதிராக நமது கவனத்தை எப்போது திருப்ப போகிறோம் என்று
தெரியவில்லை. சமூகத்தை சீரழிக்கும் இதுபோன்ற விசயங்களுக்கு எதிராக
நம்மால் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட முடியவில்லை.
அறிவுள்ள சமூகத்தில் பல கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் நல்ல
கருத்துகளை ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவே அறிவுடமையாகும்.
ஆனால் தவறு என்று தெரிந்தும் அதை மிகைப்படுத்தி பேசுவதும், ஏட்டிக்கி
போட்டியாக செய்வதும்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணமாக
இருக்கிறது.
கருத்து வேறுபாடுகள் என்பது நபி தோழர்கள், சஹாபாக்கள் காலத்திலேயே
இருந்தது. ஆனால் அவர்கள் நம்மை போல சண்டை அடித்துகொண்டிருக்கவில்லை.
அவர்கள் குரானை பற்றி பிடித்தார்கள். இஸ்லாத்தை உணர்ந்தார்கள். அதனால்
வெற்றியும் பெற்றார்கள்.
ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக இருக்கிறோம். இஸ்லாம் தெளிவாக குறிப்பிடும்
விசயங்களில் நாம் உறுதியாக பின்பற்ற வேண்டும். அதேபோல பல கருத்துக்கள்
உள்ள ஒரு விசயத்தில் நமக்கு எந்த கருத்து சரி என ஆராய்ந்து அதை
பின்பற்றலாம். இதில் நான் பின்பற்றுவதுதான் சரி என்ற வாதம்
தேவையில்லாதது.
இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே சமத்துவமும்,
சகோதரத்துவமும்தான்,  அந்த சகோதரத்துவம்தான் இன்று இஸ்லாமிய சமூகத்தில்
குறைந்து வருகிறது.
சிறிய சிறிய வேறுபாடுகளை களைந்து, இஸ்லாமிய சகோதரர்களாக இணைந்து
செயல்படுவோம். அதுதான் இன்றைய காலத்தின் தேவையும்கூட.

- வி.களத்தூர் பாரூக்
Thanks:Lalpettimes.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!