அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!

வலைப்பதிவு காப்பகம்

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

நீர் எந்த ஜமாத்து ...?

நீர் எந்த ஜமாத்து ...?[ அவசியம் படிக்கவும் மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும் அல்லாஹ்வுக்காக!!!  அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
இஸ்லாம் தான் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் . இஸ்லாத்தின் எந்த பிரிவும், பிளவும் இல்லை.  இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பல பிரிவுகளாக பிளவுப்பட்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள் !  அண்ணல் நபி [ஸல்] கூறிய ஒரு ஹதீஸின் கருத்து .. என்னுடைய சமுதாயம் 73 கூட்டமாக பிரியும் . அதில் ஒன்றும் மட்டும்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம் !
அது எந்த கூட்டம் என்பதை யார் அறிவார்..?


இன்று ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள் ஒரு ஜமாஅத் , பிள்ளைகள் ஒரு ஜமாஅத் . அரசியல் கட்சியைப் போன்று பாவித்துக் கொண்டுயிருக்கிறார்கள் .சண்டையும் , சச்சரவுகளும் தான் நிலவுகிறது. பெற்றோர்கள் தர்கா போனால் , மௌலத் ஓதினால் . பிள்ளைகள் பெற்றோர்களைப் பார்த்து கூறுவது , ''நீங்கள் அல்லாஹ்வுக்கே ஷிர்க் செய்கிறீர்கள் '' என்று. இப்படித்தான் அவர் இவரை பார்த்து , இவர் அவரை பார்த்து கூறிக் கொண்டியிருக்கிறோம்.  இந்த அவலநிலை நம்மிடத்தில் உருவாகிவிட்டது! தொப்பி என்பது இஸ்லாத்தின் அடையாள சின்னமாக ஆக்கிவிட்டார்கள் . ஒருவர் தொப்பி இல்லாமல் பள்ளிக்குள் போகக் கூடாது. ஒருவர் தாடி இல்லாமல் பள்ளிக்குள் போகலாம். தொப்பிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவர்கள் , ஏன்  தாடிக்கு கொடுப்பதில்லை..? தொப்பியை வைத்து  ஒரு பிரச்சனை!  மக்கா , மதீனா பள்ளிகளில் பார்த்தீர்கள் என்றால் அங்கே பெரும்பாலும் மக்கள்கள் தொப்பி இல்லாமல் தான் தொழுவார்கள் . அங்கே எந்த பிரச்சனையும் இல்லை. அப்படி தொப்பி போட்டு தான் போனால் என்ன இவர்கள். பிடிவாதம்! வீம்பு! இந்த தொப்பி பிரச்சனையை பெரிய பிரச்சனையாக கொண்டு வந்தது அண்ணன் அவர்கள்தான் . அவரே எப்பொழுதும் தொப்பியுடன் இருப்பதை காணலாம்.

ஒருவர் வெளியூர் சென்றால் . அவர் அந்த ஊரில் பள்ளிகள் எங்கே இருக்கு என்பதை அறியமாட்டார் [போகாது ஊர் என்று வைத்துக் கொள்வோம்] தொழுகை நேரம் வந்துவிட்டது , அவர் இன்ன நேர தொழுகையை அவர் தொழ  வேண்டும். அவர் ஒரு ஆட்டோ நபரிடம் விசாரிக்கிறார் . '' பள்ளிவாசல் எங்கே இருக்கிறது..?'' என்று. அந்த ஆட்டோ டிரைவர் கேட்கிறார் . '' நீங்கள் எந்த பள்ளிவாசலை கேட்கிறீர்கள் ..? சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலா? அல்லது தௌஹீத் பள்ளிவாசலா ..? [இது கதை அல்ல இப்படியெல்லாம் நடக்கிறது] இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால்  , மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை  எப்படி விளங்கி வைத்திருப்பார்கள் ! அவர்களுக்கு நாம் எப்படி இஸ்லாத்தை பற்றி  எடுத்து சொல்வது! இதுப்போன்ற கேள்விகள் வரும்போது நாம் என்ன சொல்வது என்று நாமே குழம்பிவிடுவோம்  . ஆதங்கத்துடன் எழுதுகிறேன். ஒவ்வொரு ஜமாத்தாரும் நாங்கள்தான் நேரான வழியில் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாக எண்ணுகிறார்கள்  என்பதை மன வேதனையுடன் குறிப்பிடுகிறேன்.

முஸ்லிம்குள்ளே  நாம் ஒருவொர்கொருவர்  அடித்துக் கொண்டு, சண்டையிட்டுக் கொண்டால்  மாற்று மத மக்கள்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி கவலையில்லை . இஸ்லாத்தின் எதிரிகள்  நம்மை அழிக்க  வேண்டும் என்று  திட்டம் தீட்டு கொண்டுயிருக்கிறார்கள் .அதையும் பற்றியும் கவலையில்லை . ஒரு ஜமாஅத் ஷிர்க் நோட்டிசு ஒட்டுகிறது. இன்னொரு ஜமாஅத் அதை கிழித்து விடுகிறது. ஒரு ஜமாஅத்  அழைப்பு விடுகிறது '' ஷிர்க் மாநாட்டிற்கு எல்லோரும் வாருங்கள் என்று'' இன்னொரு ஜமாஅத் அழைக்கிறது '' தர்கா எழுச்சி மாநாடு எல்லோரும் வாருங்கள் என்று''.  ஒரே தேதியில் இரு அழைப்பு!  இந்த இரு ஜமாஅத் இடையில்  முஸ்லிம் மக்கள்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக புரிகிறது!  இதனால் ஏற்படும் பின்விளைவுகளை யாரும் சிந்திப்பதில்லை. நாம் முஸ்லிம் என்று சொல்ல விரும்புவதை விட, நாம் இந்த ஜமாஅத்! இந்த இயக்கம் என்று சொல்வதை தான் பார்க்கிறோம்! வீண் விரயம் செய்யக் கூடாது என்று சொல்கிறார்கள் , ஆனால், நல்ல வீண் விரயம் செய்கிறார்கள்  . சகோதரத்துவத்தை போற்றுவதை விட தங்களின் ஜமாத்தை அல்லது இயக்கதைதான் போற்றுகிறார்கள்! ஒற்றுமை விட ஜமாஅத் தான் முக்கியம்!  ஹதீஸ்களை சொல்கின்றோம் என்ற பெயரில்  வேற்றுமை படுத்துவது  இஸ்லாத்தின் வழிமுறையா..? அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கற்று கொடுத்தது  இந்த வழிமுறையிலா..? சிந்திக்க வேண்டாமா??? அல்லாஹ்விடம்  என்ன பதில் சொல்ல போகிறோம்..?

அது ஷிர்க் ! இது ஷிர்க் என்று சொல்லிக் கொண்டு போகும் ஒரு கூட்டம் . மௌலத் , கந்தூரி விழா , தர்கா , கொடி , ஊர்வலம், பித்-அத்  இப்படி மக்களை வழி  கெடுத்துக் கொண்டு போகிறது ஒரு கூட்டம். இனி வரும் நிறைய கூட்டம்! வரும் காலம் பொற்காலம் அல்ல! பெரும் சோதனை காலம். குழப்பம் சூழ்ந்து கொள்ளும் காலம்! இதுவா..? அல்லது அதுவா? என்று மக்கள்கள் குழம்பி நிற்கும் காலம் ! ஒருவரையொருவர் புறம் பேசிக் கொண்டு திரியும் காலம் . அதை பெரிய பாவமாக நினைக்காத காலம்! ஒரு ஹதீஸின் கருத்து .. விபச்சாரத்தை விட பெரிய பாவம் புறம் பேசுவது! அந்த புறம் இப்பொழுது ஹலால் போல பாவிக்கப்படுகிறது. உலகத்தில் சிறந்த மார்க்கம் இஸ்லாம் தான்! அந்த இஸ்லாத்தில் எந்த வழி  சிறந்தது என்று இப்பொழுது பேச ஆரம்பித்து விட்டார்கள். அல்லாஹ்  நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்!

நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ..? நாம் நம் ஈமானை பாதுகாத்து கொள்ள வேண்டும். குழப்பத்தை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேட வேண்டும்! அல்லாஹ்  விரும்பும் முஸ்லிமாக நம்மை வாழும் படி ஆக்க வேண்டும்  . அல்லாஹ்  அருள் செய்ய வேண்டும்! எந்த ஜமாஅத் இருந்தால் எல்லோரும் நம் சகோதரர்கள் தான் . யாரையும் பிரித்து பார்க்க கூடாது. எல்லோருக்கும் ஸலாம்  சொல்ல வேண்டும். யாரையும் புறகணிக்க கூடாது! புறம் பேசக் கூடாது. எப்பொழுதும் அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். நமக்கும்! மற்றவர்களுக்கும் துஆ கேட்க வேண்டும்! அல்லாஹ்  விரும்பும் முஸ்லிமாக வாழ வேண்டும். முஸ்லிமாக மரணிக்க வேண்டும்!

அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.
குறிப்பு .. நான் எந்த ஜமாத்தும் அல்ல! எந்த இயக்கத்திலும் அல்ல ! நான் ஒரு முஸ்லிம்! யாரையாவது அல்லது எந்த ஜமாத்தையாவது தவறாக எழுதியிருந்தால் அல்லாஹ்வுக்காக  இந்த சிறியவனை மன்னிக்கவும்! நான் என்னுடைய ஆதங்கத்தை  சொல்லிவிட்டேன் ...  அல்லாஹ்  என் மூலமாக யாருக்காவது நேர்வழியை காட்டுவது எனக்கு உலகத்தை விட சிறந்தது!   அதற்காகத்தான் என் நேரத்தையும் செலவு செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்!
உங்கள் ஆதரவு என்றும் சுவனப்பாதை ***************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

your comment is welcomed!